×

தேவகவுடா பேரன் எம்பி பதவி தகுதி நீக்கம்; தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

பெங்களூரு: மக்களவை உறுப்பினர் பதவியை ரத்து செய்து வழங்கியுள்ள தீர்ப்புக்கு தடை விதிக்ககோரி பிரஜ்வல் ரேவண்ணா தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மக்களவைக்கு கடந்த 2019ல் நடந்த தேர்தலில் ஹாசன் தொகுதியில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிட்டு பிரஜ்வல் ரேவண்ணா வெற்றி பெற்றார். இதனிடையில் அவர் தாக்கல் செய்த சொத்து பட்டியலில் அவர் பெயரில் உள்ள ரூ.23 கோடி சொத்து விவரம் உள்பட பல அசையும் மற்றும் அசையா சொத்துகள் விவரங்களை தெரிவிக்காமல் மறைத்துள்ளதாக வக்கீல் தேவராஜேகவுடா, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இரு தரப்பு வாதம் கேட்டபின் கடந்த 1ம் தேதி கே.நடராஜன் வழங்கிய தீர்ப்பில், வேட்புமனு தாக்கல் செய்தபோது, சொத்து விவரங்கள் மறைத்துள்ளதற்கான ஆதாரம் இருப்பதால், மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் படி ரேவண்ணாவின் எம்பி பதவியை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்ககோரி பிரஜ்வல் ரேவண்ணா, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த 5ம் தேதி இடைக்கால மனு தாக்கல் செய்தார். அம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அதன்படி நீதிபதி நேற்று வழங்கிய தீர்ப்பில், மனுதாரரின் எம்பி பதவியை ரத்து செய்து வழங்கியுள்ள தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது. வேண்டுமானால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post தேவகவுடா பேரன் எம்பி பதவி தகுதி நீக்கம்; தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Deve Gowda Baran ,ICourt ,Bengaluru ,Prajwal Revanna ,Lok Sabha ,Deve Gowda ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் விலங்குகளுக்கு நீர்,...